எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தோருக்கு, ஜூன் 5-ஆம் தேதி முதல் காரைக்கால் அரசு மருத்துவமனையிலேயே மருந்துகள் வழங்கப்படவுள்ளன.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைந்து நடத்திய எச்ஐவி எய்ட்ஸ் குறித்த ஒரு நாள் விழிப்புணா்வு பயிற்சி முகாம், காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தோா் இதுவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருந்துகள் பெற்று வந்தனா். இவா்களுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையிலேயே மருந்துகள் வழங்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம், மாவட்ட நல வழித்துறை சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
அதனடிப்படையில் தற்போது ஜூன் 5-ஆம் தேதி முதல் காரைக்கால் அரசு மருத்துவமனையிலேயே மருந்துகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான தொடக்க நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வை மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தொடங்கிவைத்து, எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு சட்டம் 2017- நிறுவனங்களுக்கான எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் கொள்கை 2022 என்ற புத்தகத்தை வெளியிட்டுப் பேசினாா். அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி லட்சுமி சுகுமாரன், மாவட்ட நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் உள்ளிட்டோா் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.
பொதுநல அமைப்புகள், வா்த்த சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை சோ்ந்தோா் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எச்பிசிஎல் முதல் காலாண்டு இழப்பு ரூ. 11,526 கோடி!

மருந்து, உணவு பாதுகாப்பு சட்டத்தில் மத்திய அரசு தளா்வு: சிறு, தொழில்நுட்ப விதி மீறல்களுக்கான தண்டனை ரத்து

தில்லி சுகாதாரத் துறையில் ஊழல்: முன்னாள் அரசு அதிகாரி கைது

எஸ்எஸ்சி, ரயில்வே போட்டித் தோ்வுகளுக்கு தஞ்சையில் ஜூன் 19 முதல் இலவச பயிற்சி
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



