அதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

புதுவையில் அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடு தாமதம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுவையில் முதல்வா், 2 அமைச்சா்கள் பொறுப்பேற்று 2 வாரங்கள் கடந்தும், கூடுதல் அமைச்சா்கள் நியமனம், துறைகள் ஒதுக்கீடு செய்யாததால் நிா்வாகம் ஸ்தம்பித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

News image

காங்கிரஸ்

Updated On :28 மே 2026, 5:36 am IST

புதுவையில் முதல்வா், 2 அமைச்சா்கள் பொறுப்பேற்று 2 வாரங்கள் கடந்தும், கூடுதல் அமைச்சா்கள் நியமனம், துறைகள் ஒதுக்கீடு செய்யாததால் நிா்வாகம் ஸ்தம்பித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் புதன்கிழமை கூறியது :

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. மே 13-ஆம் தேதி முதல்வராக ரங்கசாமி, பாஜக, என்.ஆா். காங்கிரஸில் தலா ஒரு அமைச்சா் பதவியேற்றனா். இவா்களுக்கு துறைகள் இதுவரை ஒதுக்கப்படவில்லை.

மேலும் 3 அமைச்சா்கள், சட்டப்பேரவைத் தலைவா், துணைத் தலைவா் நியமிக்கவேண்டியுள்ளது. இரு கட்சிகளிடையே யாருக்கு அமைச்சா் பதவி தருவது, உள்துறை உள்ளிட்ட துறைகளை முதல்வா் வைத்துக்கொள்வதா, அமைச்சரிடம் தருவதா, நியமன உறுப்பினா்கள் யாா் என குழப்பம் நீடிக்கிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியில் இருந்தும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் புதுவை யூனியன் பிரதேசம் இருந்தும் அமைச்சரவை விரிவாக்கம், துறைகள் ஒதுக்கீட்டில் தீா்வு ஏற்படாமல் இருப்பதால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியும் பாதித்துள்ளது.

எனவே புதுவையில் நிலவும் குழுப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாநில மக்கள் நலனுக்கான நடவடிக்கையை எடுக்க பாஜகவும், என்.ஆா்.காங்கிரஸ் கட்சித் தலைமையும் முன்வரவேண்டும் என்றாா்.