முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் பொறுப்பேற்ற 9 அமைச்சர்களுக்கு இன்று(மே 16) துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றது. முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். பதவியேற்று 6 நாள்களாகியும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து இன்று அமைச்சர்களுக்கான துறைகள் பட்டியல் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகரை முதல்வரின் தனிச் செயலர் செந்தில் குமார் சந்தித்திருந்தார்.
இதையடுத்து முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் சி. ஜோசப் விஜய் - காவல், உள்துறை, பொது நிர்வாகம், மகளிர் மேம்பாடு, இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் விநியோகம்
என். ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை - ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து ஒன்றியம், பாசனத் திட்டங்கள்.
ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித் துறை (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாட்டுத் துறை.
கே.ஜி. அருண்ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை (மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்)
கே.ஏ. செங்கோட்டையன் - நிதித் துறை (நிதி, ஓய்வூதியங்கள்)
பி. வெங்கடரமணன் - உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை.
ஆர். நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத் துறை
ராஜ்மோகன் - பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மக்கள் தொடர்புத் துறை
டி.கே. பிரபு - கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை.
எஸ். கீர்த்தனா - தொழில் துறை (தொழிற்சாலைகள், முதலீடு ஊக்குவிப்பு) என அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Summary
Ministries alloted to new ministers in TVK govt

மகளிருக்கு ரூ. 2,500 எப்போது? தேவையெனில் விஜய், செய்தியாளர்களைச் சந்திப்பார்! சிடிஆர் நிர்மல் குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் சார்..! நடிகர் முத்துக்காளை வெளியிட்ட கோரிக்கை விடியோ!

பேரவையில் முதல்வர் விஜய் அளித்த உத்தரவாதங்கள்! | TVK

தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்

நம்பிக்கை கோரும் தீர்மானம்! முன்மொழிந்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
