நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

அமைச்சர்கள் நியமிக்கப்படாத துறைகள்!

தமிழ்நாட்டில் உயர்கல்வி உள்பட முக்கிய துறைகளுக்கு அமைச்சர் எவரும் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.

News image

தமிழக சட்டப்பேரவை - IANS

Updated On :46 நிமிடங்கள் முன்பு

தமிழ்நாட்டில் 9 அமைச்சர்களுக்கான துறைகள் இன்று ஒதுக்கப்பட்ட நிலையில் உயர்கல்வி உள்பட முக்கிய துறைகளுக்கு அமைச்சர் எவரும் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.

அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மை நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண்துறை, பால்வளம், மீன்வளம் & கால்நடைத்துறை, கைத்தறி & காதி, கூட்டுறவுத்துறை, வணிகவரி & பத்திரப்பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை, வீட்டுவசதித் துறை, உயர்கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுக்கு அமைச்சர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று தேர்தலின்போது தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். இதன்படி, தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 2 அமைச்சரவை ஒதுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அதேபோல எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணிக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றது. முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். பதவியேற்று 6 நாள்களாகியும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இன்று அமைச்சர்களுக்கான துறைகள் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநர் அர்லேகரை முதல்வரின் தனிச் செயலர் செந்தில் குமார் சந்தித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு காவல், உள்துறை, பொது நிர்வாகம், மகளிர் மேம்பாடு, இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் விநியோகம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Summary

"No minister has been appointed yet for key departments, including Higher Education, in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.