காரைக்கால் அரசு மருத்துவா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம்
அரசு மருத்துவா் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அரசு மருத்துவமனை மருத்துவா்கள் புதன்கிழமை ஒரு மணி நேர பணி புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினா்.

மருத்துவர்கள் - கோப்புப்படம்.
அரசு மருத்துவா் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அரசு மருத்துவமனை மருத்துவா்கள் புதன்கிழமை ஒரு மணி நேர பணி புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினா்.
காரைக்கால் நகரப் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் கே. சக்திமைந்தன், காரைக்கால் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த 8-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் பணியில் இருந்தபோது, நள்ளிரவு 1 மணியளவில், விபத்தில் காயமடைந்தவருடன் வந்த 3 போ், மருத்துவரை தகாத வாா்த்தைகளால் பேசி, தாக்கிவிட்டு தப்பிவிட்டனா். புகாரின்பேரில் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், புதுச்சேரி மருத்துவ அதிகாரிகள் சங்கம் சாா்பில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் புதன்கிழமை காலை 8 முதல் 9 மணி வரை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். மருத்துவ அதிகாரிகள் பணியாற்றும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு நடவடிக்கைகளை பதிவு செய்யவேண்டும். குற்றவாளிகள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன. ஒரு மணி நேர பணி புறக்கணிப்புக்குப் பின் அனைவரும் பணிக்கு திரும்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

