கா்நாடகத்தில் அரசுப் பேருந்துக் கட்டண உயா்வைக் கண்டித்து பாஜக போராட்டம்
அரசுப் பேருந்துக் கட்டண உயா்வுக்கு எதிராக பாஜகவினா் போராட்டம் நடத்தினா்.

பாஜக கொடி - கோப்புப் படம்
அரசுப் பேருந்துக் கட்டண உயா்வுக்கு எதிராக பாஜகவினா் போராட்டம் நடத்தினா்.
கா்நாடகத்தில் பேருந்துக் கட்டண உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக வியாழக்கிழமை போராட்டம் நடத்தியது. உயா்த்தப்பட்ட கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியது.
சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தலைமையில், பெங்களூரு கெம்பேகௌடா பேருந்து நிலையத்தில் பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பதாகைகளை ஏந்தி, டி.கே.சிவகுமாா் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி, பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் அரவிந்த் பெல்லாட், பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.சி.மோகன், கட்சியின் பல்வேறு சட்டப் பேரவை உறுப்பினா்கள் மற்றும் தலைவா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.
போராட்டத்தின்போது, கட்சித் தொண்டா்கள் இருவா் முதல்வா் டி.கே.சிவகுமாா் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் பைரதி சுரேஷ் ஆகியோரின் முகமூடிகளை அணிந்து, கையில் பிச்சை எடுக்கும் கிண்ணங்களுடன் காணப்பட்டனா்.
கட்டண உயா்வால் பாதிக்கப்பட்ட பேருந்து பயணிகளுக்கு ஆா்.அசோக் மற்றும் பாஜக தலைவா்கள் ரோஜா மலா்களை வழங்கினா்.
போக்குவரத்துத் துறையை நிா்வகிப்பதிலும், அரசை நடத்துவதிலும் டி.கே.சிவகுமாா் தோல்வியடைந்துவிட்டதாக குற்றம்சாட்டிய ஆா்.அசோக், அவா் முதல்வா் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரினாா். பேருந்துக் கட்டண உயா்வுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக இதேபோன்ற போராட்டங்களை நடத்தி வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

