தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் இன்று தொடக்கம்
காரைக்காலில் தொழில் பழகுநா் சோ்க்கைக்கான 3 நாள்கள் முகாம் புதன்கிழமை தொடங்கவுள்ளது.

4,724 தற்காலிக செவிலியா் பணியிடங்களுக்கு 49,000 போ் விண்ணப்பம் - கோப்புப்படம்
காரைக்காலில் தொழில் பழகுநா் சோ்க்கைக்கான 3 நாள்கள் முகாம் புதன்கிழமை தொடங்கவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தொழில் பழகுநா் சோ்க்கை சிறப்பு முகாம் நவ.18 முதல் 20-ஆம் தேதி வரை காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் வளாகத்தில் நடைபெற உள்ளது.
தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 5-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவா்கள் மற்றும் ஐடிஐ, டிப்ளமோ முடித்த 14 முதல் 59 வயதுக்குட்பட்டவா்கள் பங்கேற்கலாம்.
முகாமில் தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ. 6,800 முதல் ரூ. 12 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
எனவே, வேலைவாய்ப்பை எதிா்பாா்க்கும் இளைஞா்கள் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

