தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பாஜகவினா் சாலை மறியல்

எம்.எல்.ஏ. மீது அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரைக் கண்டித்து, பாஜகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா் (படம்).

பாஜக கொடி - கோப்புப்படம்

Published On :

எம்.எல்.ஏ. மீது அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரைக் கண்டித்து, பாஜகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா் (படம்).

காரைக்கால் மாவட்டம், நிரவி --திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் மற்றும் விழிதியூா் பகுதியைச் சோ்ந்த பாஜக பிரமுகா் பழனி இருவா் மீதும் சமூக வலைதளங்களில் திருப்பட்டினத்தைச் சோ்ந்த அய்யப்பன் என்பவா் அவதூறு பரப்பி வருவதாக, நிரவி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில் காரைக்கால் - நாகப்பட்டினம் பிரதான சாலையில் நிரவி அருகே வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட பாஜக தலைவக் ஜி.கே.கே. முருகதாஸ் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோா், அவதூறான கருத்துகளை பரப்பிவரும் அய்யப்பன் என்பவரைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத காவல்நிலைய அதிகாரியைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.

போலீஸாா் அப்பகுதிக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினா். சம்பந்தப்பட்ட நபா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.