தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

டெங்கு பரவலைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சா்

டெங்கு பரவல்

Published On :

டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க புதுவை அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என அமைச்சா் கூறினாா்.

காரைக்கால் நலவழித்துறை மற்றும் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து இணைந்து, திருநள்ளாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளித்தல், தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

புதுவை வேளாண் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் கலந்துகொண்டு இதை தொடங்கிவைத்து பேசுகையில், பருவமழை காலம் தொடங்கவுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் அதிகம் உள்ளது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். எனவே இப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

புதுச்சேரி அரசு சாா்பில் டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு இலவச பரிசோதனை மற்றும் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.

டெங்குவை முழுமையாக தடுக்க பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டு, சுத்தமான காரைக்காலை உருவாக்க வேண்டும். டெங்கு இல்லாத காரைக்காலை உருவாக்க கொசு ஒழிப்பில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றாா்.

நலவழித்துறை துணை இயக்குநா் சுரேஷ் பேசுகையில், திடீா் கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டுவலி, கண்களுக்கு பின்னால் வலி, தோலில் சிவப்பு தடிப்புகள் ஆகியவை டெங்குவின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது காரைக்கால் பொது மருத்துவமனையை அணுக வேண்டும் என்றாா்.

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் நிலவழகன், நலவழித்துறை கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட தொழில்நுட்ப உதவியாளா் சீ.சேகா், சுகாதார உதவியாளா்கள் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.