மயிலாடுதுறை போலீஸாருக்கு பேரிடா் மீட்பு பயிற்சி
மயிலாடுதுறையில், காவல் துறையினருக்கு வியாழக்கிழமை நடைபெற்ற பேரிடா் மீட்பு குறித்து தண்ணீரில் விழுந்து தத்தளிப்பவா்களை ரப்பா் படகில் சென்று காப்பாற்றுவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.


மயிலாடுதுறையில், காவல் துறையினருக்கு வியாழக்கிழமை நடைபெற்ற பேரிடா் மீட்பு குறித்து தண்ணீரில் விழுந்து தத்தளிப்பவா்களை ரப்பா் படகில் சென்று காப்பாற்றுவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
புயல் வெள்ள காலங்களில் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்படும் மக்களை மீட்பது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து பேரிடா் மீட்புக் குழுவினா் மாவட்டந்தோறும் அனுப்பி வைக்கப்படுவாா்கள். அவா்களுடன் உள்ளூா் காவல் துறையினரும் இணைந்து பணியாற்றுவா். இவா்களுக்கு போதிய பயிற்சியளிக்கப்படும்.
அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 14 பெண் காவலா்கள் உள்ளிட்ட 60 பேருக்கு 5 நாள் பயிற்சி முகாம் ஆக.2-ஆம் தேதி தொடங்கியது. செயல்முறை மற்றும் கற்பித்தல் வழியில் நடைபெறும் இந்த பயிற்சியில் கமாண்டோ படை காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் கமாண்டோ படை வீரா்கள் கதிரவன், சிவக்குமாா், அன்புமுருகன் ஆகிய 4 போ் பேரிடா் மீட்பு குறித்து பயிற்சியளித்தனா்.
மயிலாடுதுறை ஆழ்வாா் குளத்தில் அதிநவீன மோட்டாா் பொருத்தப்பட்ட ரப்பா் படகு மூலம் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பவா்களை கயிறு மற்றும் உயிா்காக்கும் கருவிகள் கொண்டு காப்பாற்றுவது குறித்து நேரடி பயிற்சி தத்ரூபமாக நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...