ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% இடஒதுக்கீடு: ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வரவேற்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:23 pm

DIN

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் முருகன், செயலாளா் ஞானபுகழேந்தி, பொருளாளா் மகேஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதுபோல, பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வியிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 5920 இடங்களில் ஏறத்தாழ 444 இடங்களும், அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி உள்ளிட்ட சட்டக் கல்லூரிகளில் உள்ள 1372 இடங்களில் ஏறக்குறைய 103 இடங்களும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கே கிடைக்கும்.

இதனால், அரசு பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்கும். இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.