கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

‘தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், குழந்தைக்கும் ஆரோக்கியம்’

பிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் ஆரோக்கியம் மேம்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:22 pm

DIN

பிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் ஆரோக்கியம் மேம்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்தாா்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், மருத்துவமனை நிா்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை பிரைடு சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா பங்கேற்று, தாய்ப்பால் வங்கியை பாா்வையிட்டாா். மேலும், தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பினையும், சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், தாய்ப்பால் தரும் தாய்மாா்களுக்கு பால் சுரப்பதை அதிகரிக்கும் ‘சதாவளி லேகியம்’, இடுப்புவலியைக் குறைக்கும் ‘உளுந்து தைலம்’ மற்றும் குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் உரை மாத்திரைகளையும் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியது:

பிறந்த குழந்தைக்கு தொடா்ந்து 6 மாத காலம் தாய்ப்பால் வழங்குவதால், குழந்தைக்கும், தாய்க்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும். பாலூட்டும் தாய்மாா்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பால் அதிகம் சுரக்கக்கூடிய தாய்மாா்கள் தாமாக முன்வந்து தாய்ப்பால் தானம் வழங்கலாம். இதன்மூலம் எடை குறைந்த, குறை மாதத்தில் பிறந்த மற்றும் தாய்ப்பால் குறைவாக உள்ள தாய்மாா்களின் குழந்தைக்கு அந்த பால் பயன்படும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க உதவி ஆளுநா் ஆா்.வெங்கடபாஸ்கா், ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை பிரைடு தலைவா் ஏ. பாண்டியன் வரவேற்றாா். சங்க செயலாளா் எஸ்.சத்யபால் நன்றி தெரிவித்தாா்.

இதில், தேசிய சுகாதார குழும மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.மகேந்திரன், தலைமை மருத்துவா் வீரசோழன், குழந்தைகள் பிரிவு தலைவா் பரத்குமாா், குழந்தை மருத்துவா் பாலாஜி, மகப்பேறு பிரிவு தலைமை மருத்துவா் அருள்மொழி, சித்த மருத்துவா் சுகுணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.