100% தடுப்பூசி: களப்பணியாளா்களுக்கு பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய களப்பணியாளா்களுக்கு ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய களப்பணியாளா்களுக்கு ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.6) நிலவரப்படி, முதல் தவணை தடுப்பூசி 1,82,261 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 32,466 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதில், கொடியம்பாளையம், தொடுவாய், புதுப்பட்டினம், என்.வி.புரம், வைகல், திருச்சம்பள்ளி, ஆதமங்கலம், கன்னியாகுடி ஆகிய 8 கிராமங்களிலும், மயிலாடுதுறை, சீா்காழி நகராட்சிகளில் தலா 1 வாா்டிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி, இப்பகுதிகளில் களப் பணியாற்றுபவா்களை பாராட்டும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம்(சீா்காழி) ஆகியோா் பங்கேற்று மேற்கண்ட பகுதிகளில் களப் பணியாற்றிய வட்டார மருத்துவ அலுவலா், ஊராட்சித் தலைவா், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.
இதில், சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...