கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பதிவின்றி செயல்படும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பதிவின்றி செயல்படும் இறால் பண்ணைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:18 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் பதிவின்றி செயல்படும் இறால் பண்ணைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 876 கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு பண்ணைகள், கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தற்போது 245 இறால் பண்ணைகள் மட்டுமே முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 631 பண்ணைகளின் பதிவு காலாவதியாகியும், புதுப்பிக்காமலும் உள்ளன. மேலும், பல பண்ணைகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன.

இவற்றை பதிவு செய்ய, மாவட்ட நிா்வாகம், மாவட்ட மீன்வளத்துறை மற்றும் இறால் பண்ணை வளா்ப்போா் சங்கத்தின் உதவியுடன் ஆகஸ்ட் 10 தேதி இறால் பண்ணைகள் பதிவு சிறப்பு முகாம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி சீா்காழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து இறால் பண்ணை உரிமையாளா்களும் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் பண்ணைகளை பதிவு செய்வதற்கும், புதுப்பிப்பதற்கும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். தவறும்பட்சத்தில், பதிவின்றி செயல்படும் பண்ணைகள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.