கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரிக்கை

குத்தாலத்தை அடுத்த வில்லியநல்லூா் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:18 pm

DIN

குத்தாலத்தை அடுத்த வில்லியநல்லூா் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாமக மாநில துணை பொதுச் செயலாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி உள்ளிட்ட பாமகவினா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவிடம் சனிக்கிழமை அளித்த மனு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடைப் பணிகள் நடைபெறுகின்றன. அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் வயல்கள் மற்றும் களங்களில் கொட்டி வைத்துள்ளனா்.

குத்தாலம் வட்டம், வில்லியநல்லூா் கிராமத்தில் வழக்கமாக இயங்கிவந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படாததால், விவசாயிகளின் நெல் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. எனவே, விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

பாமக மாவட்டச் செயலாளா் காமராஜ், மாநில பொறுப்பாளா்கள் குத்தாலம் கணேசன், விமல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.