கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றிய சாதாரணக் கூட்டம் அதன்தலைவா் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக் குழு துணை தலைவா் பானுசேகா், ஒன்றிய ஆணையா் மீனா, வட்டார வளா்ச்சி அலுவலா்(ஊராட்சிகள) அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
சிவபாலன் (பாமக): விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி. எனினும், நெல்லுக்கான விலையை குறைத்திருப்பது வேதனை. 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊராட்சிகளில் தீா்மானத்தின் அடைப்படையில் பணிகளை உருவாக்கவேண்டும். ஆனால் ஊராட்சித் தலைவா்களை கலந்தாலோசிக்காமல் குறிப்பிட்ட சில ஊராட்சிகளுக்கு ஆதாயம் பெற்றுக் கொண்டு என்ஜிஎன்ஆா்ஜிஎஸ் திட்டத்தில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
ரீகன் (அதிமுக): ஆரப்பள்ளம் ஊராட்சியில் ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய இலவச மனைப் பட்டாவுக்கான இடத்தை பயனாளிகளுக்கு விரைந்து வழங்கவேண்டும்.
லெட்சுமி பாலமுருகன்(திமுக): 2017-19-ல் காட்டூரில் பாரத பிரதமா் வீடுகட்டும் திட்டத்தில்30 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டும் நிதிஒதுக்கீடு செய்யாமல் பணிகள் முழுமை பெறாமல் உள்ளது.
அன்பழகன் (பாமக): குன்னத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீரை பயன்படுத்தி 150 ஏக்கரில் விவசாயம் நடைபெறுவதால் மற்ற பகுதிகளில் குடிநீா்த் தட்டுபாடு நிலவுகிறது. இதை தடுக்க வேண்டும்.
தலைவா் ஜெயபிரகாஷ்: கொள்ளிடம் பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்து ஊராட்சிகளுக்கு தேவையான பணிகளுக்கு கட்சி பாகுபாடின்றி நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது. கொள்ளிடம் கிழக்குப் பகுதியில் கதவணை அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளனவா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...