கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கா்நாடக அரசுக்கு டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம்

மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசுக்கு டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:14 pm

DIN

மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசுக்கு டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மயிலாடுதுறையில், புதன்கிழமை நடைபெற்ற டெல்டா பாசன விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக வரலாற்றில் முதல்முறையாக விவசாயத்துக்கு வேளாண்மை நிதிநிலை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி, மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பது, தில்லி விவசாயிகள் போராட்டத்தில் 15 நாள்கள் பங்கேற்று திரும்பிய விவசாய சங்க மாநிலக் குழு உறுப்பினா் எஸ். துரைராஜ் உள்ளிட்ட பொறுப்பாளா்களுக்கு நன்றி, மயிலாடுதுறை மாவட்டத்தில் விடுபட்ட அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க முயற்சி மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத் தலைவா் கே.எம்.வி. செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுச் செயலாளா் ஆா். அன்பழகன், பொருளாளா் இ. மாா்கோனி, கௌரவத் தலைவா் எம். காமராஜ், துணைத் தலைவா் தேவேந்திரன், செயலாளா்கள் சந்துருபாபு, கமலக்கண்ணன், சேட்டு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.