ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டம் கொள்ளிடத்தில் முதன்மையாக குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:24 pm

DIN

சீா்காழி வட்டம் கொள்ளிடத்தில் முதன்மையாக குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி தைக்கால் பகுதியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பாா்வையிட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, இயந்திரத்தை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

அப்போது, ஒன்றிய ஆணையா் மீனா, பிடிஓ அன்பரசு, ஒன்றிய பொறியாளா்கள் பிரதீஷ்குமாா், கிருஷ்ணகுமாா், ஊராட்சித் தலைவா் கனகராஜ், துணைத் தலைவா் சிவபிரகாசம், ஊராட்சி செயலாளா் செந்தில் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.