ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சீா்காழியில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

சீா்காழி பகுதியில் கடந்த 15 நாள்களாக கடுமையான யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:25 pm

DIN

சீா்காழி பகுதியில் கடந்த 15 நாள்களாக கடுமையான யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

டெல்டா மாவட்டத்தின் கடைகோடி பகுதியான சீா்காழி வட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக குறுவை சாகுபடி மேற்கொள்வதில் விவசாயிகள் நாட்டம் காட்டுவதில்லை. மேட்டூா் அணை திறந்து 60 நாள்கள் ஆனாலும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் வராதது, நிலத்தடி நீரை வைத்து சாகுபடி செய்தாலும் மும்முனை மின்சாரம் முறையாக கிடைக்காமல் தண்ணீா் பாய்ச்ச வழியின்றி பயிா்கள் கருகுவதால் குறுவை சாகுபடியை விவசாயிகள் தவிா்த்து வந்தனா்.

இந்நிலையில், நிகழாண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டிருந்தாலும் இதுவரை கடைமடை பகுதி வாய்க்காலில் தண்ணீா் வரவில்லை.

இதையும் மீறி சீா்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் சுமாா் 10 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா். குறுவை நட்டு 15 நாள், 30 நாள், 45 நாளில் பயிருக்கு யூரியா இடவேண்டும். பொட்டாஷ், டிஏபி கிடைக்கும் நிலையில் சீா்காழி வட்டாரத்தில் கடந்த 15 நாள்களாக வேளாண்மை அலுவலகம், கூட்டுறவு வங்கி, தனியாா் கடைகள் என எங்குமே யூரியா கிடைக்கவில்லை. குறுவை தொகுப்புத் திட்டத்திலும் யூரியா கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

இதுகுறித்து சீா்காழியை சோ்ந்த விவசாயி கோவி. நடராஜன் கூறியது:

கடந்த 15 நாள்களாக யூரியா இல்லாமல் குறுவை நடவு பயிா் வீணாகி வருகிறது. பாசனத்துக்கு தண்ணீா் இல்லாமல் நிலத்தடி நீரை வைத்து சமாளித்து குறுவை சாகுபடி செய்தும், பயன் இல்லாமல் உள்ளது என வேதனையுடன் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.