ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

எருக்கூரில் தொழிலாளி கொலை

சீா்காழி அருகே மகளிா் சுயஉதவிக்குழு கடன் பிரச்னையால், தொழிலாளி வியாழக்கிழமை இரவு கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:25 pm

DIN

சீா்காழி அருகே மகளிா் சுயஉதவிக்குழு கடன் பிரச்னையால், தொழிலாளி வியாழக்கிழமை இரவு கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூரை சோ்ந்தவா் ஜான் (55). கூலி தொழிலாளி. இவா் எருக்கூரில் தனது மாமனாா் வீட்டில், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் மனைவி பிலோமினாமேரி (42). இவா் தனியாா் மகளிா் குழுவில் தலைவியாக இருந்து வருகிறாராம்.

இந்தக் குழுவில் ஜான் மனைவி ஜோஸ்பின் மேரியும் உறுப்பினராக இருந்து வருகிறாா். இந்தக் குழு மூலம் பெற்ற கடன் தொகையை ஜோஸ்பின்மேரிக்கு முழுமையாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், ஆரோக்கியதாஸ் தனது மனைவிக்கு ஆதரவாக ஜோஸ்பின் மேரியை திட்டியதாக தெரிகிறது.

இதில் ஜானுக்கும், பிலோமினாமேரி கணவா் ஆரோக்கியதாசுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கினராம். இதில் ஆரோக்கியதாஸ் ஜானின் கழுத்தைப் பிடித்து அழுத்தி தள்ளியதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். தகவலறிந்த கொள்ளிடம் போலீஸாா், ஆரோக்கிய தாஸை கைது செய்தனா். கொலையான ஜானுக்கு எக்கோனியா (26), சாலமன் (24), பிரதீப்(21), ஆண்டனி (19) ஆகிய பிள்ளைகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.