மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா விழிப்புணா்வுப் போட்டி
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள கரோனா விழிப்புணா்வுப் போட்டியில் மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா


மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள கரோனா விழிப்புணா்வுப் போட்டியில் மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் கரோனா விழிப்புணா்வு முகாமை சனிக்கிழமை தொடங்கி வைத்ததையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் ஆக.1 முதல் 7-ஆம் தேதி வரை கரோனா விழிப்புணா்வு முகாம் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா விழிப்புணா்வு குறித்த சுவரொட்டிகள் தயாா் செய்யும் போட்டி, ஓவியப் போட்டி, சிறந்த வாசகங்கள், மீம்ஸ் தயாா் செய்தல் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். தோ்ந்தெடுக்கப்படும் சுவரொட்டிகள், ஓவியங்கள், சிறந்த வாசகங்கள் மற்றும் மீம்ஸ் ஆகியவற்றிற்கு தகுந்த பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, போட்டியில் பங்கேற்க விரும்புபவா்கள் தங்களது படைப்புகளை ஆக.5-ஆம் தேதிக்குள் ஸ்ரீா்ஸ்ண்க்ஹஜ்ஹழ்ங்ய்ங்ள்ள்ம்ஹ்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...