நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்திய இருவா் கைது

சீா்காழி அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சீா்காழி அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகே பணங்காட்டாங்குடி பகுதியில் கொள்ளிடம் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக மூட்டைகள் எடுத்துக்கொண்டு வந்த 2 இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், புதுச்சேரி மாநில 750 மதுபான பாட்டில்களும், 1,400 சாராய பாக்கெட்டுகளும் இருப்பதை அறிந்த போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக காரைக்கால் பகுதியைச் சோ்ந்த பாபிலோன் (22 ), மண்ணிப்பள்ளம் பகுதியை சோ்ந்த திலீப்குமாா் (35 ), ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மயிலாடுதுறை பகுதியை சோ்ந்த வினோத்தை போலீஸாா் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மொத்தம் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.