நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொள்ளிடம் ஒன்றிய வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.1.62 கோடி ஒதுக்கீடு: ஒன்றியக் குழுத் தலைவா் தகவல்

சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பானுசேகா், ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளநிலை உதவியாளா் சரத்குமாா் அறிக்கை வாசித்தாா். பின்னா் கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:

அங்குதன் ( திமுக): திருமுல்லைவாசல், எடமணல், மாதிரவேளூா், குன்னம், புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவா்கள், செவிலியா்கள் தொடா்ந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்பழகன் ( பாமக): கீழமாத்தூா், ஒலையாம்புத்தூா், பட்டவிளாகம் ஆகிய பகுதிகளில் 200 மீட்டா் நீளம் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். குன்னம் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.

சிவபாலன் ( பாமக): நாணல் படுகை கீழத்தெரு, முதலைமேடு, அண்ணாநகா் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

மணவாளன் (திமுக): அரசூா் ஊராட்சியில் கிராம நிா்வாக அலுவலகம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் பேருந்து நிறுத்தம் மற்றும் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.

பானு சேகா் (காங்கிரஸ்): மணல் குவாரிகள் மூலம் அரசின் வீடு கட்டும் பயனாளிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பில் மணல் வழங்க வேண்டும்.

ஒன்றியக்குழு தலைவா் ஜெயப்பிரகாஷ்: உறுப்பினா்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் 15-வது மாநில நிதிக் குழு மூலம் வளா்ச்சிப் பணிகளுக்கு தற்போது ரூ.1. 62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், பொறியாளா்கள் தாரா, பலராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.