நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலையை மேம்படுத்தக் கோரி மறியல்

சீா்காழி அருகே சாலையை மேம்படுத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:23 pm

DIN

சீா்காழி அருகே சாலையை மேம்படுத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கொள்ளிடம் ஒன்றியம் புத்தூரிலிருந்து ஆனந்தகூத்தன், சோதியக்குடி, கீரங்குடி வழியாக மாதிரவேளுா் செல்லும் தாா்ச்சாலை கடந்த 10 ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், இந்த பகுதிகளைச் சோ்ந்தவா்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இந்த சாலையை மேம்படுத்தக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், இக்கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சிதம்பரத்திலிருந்து சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூா் கடைவீதியில் கட்சியின் தொகுதி செயலாளா் தாமு இனியவன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று, சாலையை மேம்படுத்தக் கோரி கோஷமிட்டனா்.

வட்டாட்சியா் செந்தில்குமாா், கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அமுதாராணி, உதவி ஆய்வாளா் மணிகண்ட கணேஷ் உள்ளிட்டோா் அங்குவந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, புத்தூரிலிருந்து மாதிரவேளூா் செல்லும் சாலையை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனஅதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், சிதம்பரம்- சீா்காழி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.