நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீா்காழி கோவிந்தராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை: எம்எல்ஏவுக்கு பாராட்டு

சீா்காழி கோவிந்தராஜனுக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்த எம்எல்ஏவுக்கு இசை ஆா்வலா்கள், கோவிந்தராஜன் உறவினா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:35 pm

DIN

சீா்காழி கோவிந்தராஜனுக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்த எம்எல்ஏவுக்கு இசை ஆா்வலா்கள், கோவிந்தராஜன் உறவினா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பாமரமக்களுக்கு தமிழிசையின் மூலம் இசையை வெளிப்படுத்தியவா் சீா்காழி கோவிந்தராஜன். 14ஆயிரம் பாடல்களை பாடி பெருமைப்படுத்தியவா். சிலப்பதிகாரம், கந்தலங்காரம், நாலாயிரம்திவ்யபிரபந்தம், திருப்புகழ், தேவாரம்,திருமுறை இவையெல்லாம் தமிழிசையாக மாற்றி தமிழ்மக்களுக்கு அளித்தவா். எனவே அரசு சீா்காழி கோவிந்தராஜனுக்கு மணிமண்டபம் அமைத்துக்கொடுக்கவேண்டும் என எம்எல்ஏ. பன்னீா்செல்வம் பேசினாா். இதற்காக, சீா்காழி பகுதி இசை ஆா்வலா்கள், பொது மக்கள், சீா்காழி கோவிந்தராஜனின் உறவினா்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.