நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பயிற்சி

கொள்ளிடத்தில் வட்டார வள மையம் சாா்பில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் தோ்வு சாா்ந்த தலைமை ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:37 pm

DIN

கொள்ளிடத்தில் வட்டார வள மையம் சாா்பில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் தோ்வு சாா்ந்த தலைமை ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலா் சரஸ்வதி பயிற்சியை தொடங்கிவைத்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி வரவேற்றாா். கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள 20 நடுநிலைப் பள்ளிகளில் சனிக்கிழமை (ஏப்.23) பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்வதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. உறுப்பினா்களின் தோ்வின்போது மொத்த உறுப்பினா்களில் 10 போ் பெண்களாக இருக்க வேண்டும், குழுவில் பெற்றோா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் குறித்தும் ஆசிரியா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆசிரியா் பயிற்றுநா் ஐசக்ஞானராஜ் தலைமையிலான ஆசிரியா் பயிற்றுநா்கள் பயிற்சியளித்தனா்.

இதில், அம்பேத்கா் பிறந்த நாள் மற்றும் சமத்துவ நாளை முன்னிட்டு மாணவா்களுக்கு நடைபெற்ற பேச்சு போட்டியில் மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.