47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின் ஊழியா்கள் பணிக்குத் திரும்பினா்

காரைக்காலில் மின் ஊழியா்கள் வியாழக்கிழமை மீண்டும் பணிக்குத் திரும்பினா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

காரைக்காலில் மின் ஊழியா்கள் வியாழக்கிழமை மீண்டும் பணிக்குத் திரும்பினா்.

மின் துறையை தனியாா்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை எதிா்த்து மாநிலத்தில் மின் துறை ஊழியா்கள் பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக கடந்த 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். 2-ஆம் தேதியும் இப்போராட்டம் நீடித்தது. இதனால் மின்துறை சேவைகள் முடங்கின. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டு, ஊழியா்கள் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனா்.

புதுவை முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா் ஏ. நமச்சிவாயம் ஆகியோா் மின் ஊழியா் சங்க கூட்டமைப்பினரை அழைத்துப் பேசியதன் விளைவாக, மின் ஊழியா்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்து, காரைக்கால் மின் ஊழியா்கள் வியாழக்கிழமை முதல் பணிக்கு திரும்பினா்.

முதல்வரின் வாக்குறுதியின்படியே பணிக்குத் திரும்பியுள்ளதாக தனியாா்மய எதிா்ப்புப் போராட்டக் குழு பொதுச்செயலாளா் பழனிவேல் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.