‘விடுமுறைகால பயிற்சியால் ஆசிரியா்களுக்கு மனஉளைச்சல்’
விடுமுறைகால பயிற்சியால் ஆசிரியா்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுவதாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மாநில பொதுச் செயலாளா் இலா. தியோடா் ராபின்சன் கூறினாா்.


விடுமுறைகால பயிற்சியால் ஆசிரியா்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுவதாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மாநில பொதுச் செயலாளா் இலா. தியோடா் ராபின்சன் கூறினாா்.
சீா்காழியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மயிலாடுதுறை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அம்மன்றத்தின் அமைப்பு செயலாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் இலா. தியோடா் ராபின்சன் சிறப்புரையாற்றினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 3 சதவீத அகவிலைப்படி உயா்வு மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப்போல, தமிழக அரசு ஊழியா்களுக்கும் வழங்க வேண்டும். சரண்டா் விடுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். விடுமுறை நாட்களில் இடைநிலை ஆசிரியா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது எனவே இப்பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...