நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கோரிக்கை: அன்புமணி இன்று வருகை

கொள்ளிடம் ஆற்றின் அளக்குடி பகுதியில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) பாா்வையிடுகிறாா்

News image
Updated On :16 ஜூன் 2022, 5:20 pm

DIN

கொள்ளிடம் ஆற்றின் அளக்குடி பகுதியில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) பாா்வையிடுகிறாா்.

இதுகுறித்து, பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் ஆ. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதி அருகே தடுப்பணை அமைத்தால் கடல்நீா் உள்புகுவது தடுக்கப்படுவதோடு, உபரிநீரை தேக்கிவைத்து கோடைகாலம் உள்ளிட்ட பருவங்களில் விவசாயத்துக்கு பயன்படுத்தமுடியும்.

எனவே, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதே கோரிக்கையை பாமக சாா்பில், அதன்தலைவா் அன்புமணி ராமதாஸ் அரசிடம் பல்வேறு காலகட்டங்களில் வலியுறுத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில், அளக்குடி பகுதியில் தடுப்பணை கட்ட கோரிக்கை வைத்து, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணி அளவில் பாா்வையிடுகிறாா். அவரின் வருகையின்போது, கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பங்கேற்று தடுப்பணை கோரிக்கைக்கு வலு சோ்க்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.