சீர்காழி: சீர்காழி அருகே டி.மணல்மேடு கிராமத்தில் அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு இயங்கிவருகிறது. சீர்காழி தாலுக்காவில் அறுவடை செய்யப்படும் 3500 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இந்த திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்த நெல் சேமிப்பு கிடங்கு தாழ்வான பகுதியில் உள்ளதால் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையால் சேமிப்புக் கிடங்கை சுற்றி தண்ணீர் தேங்கி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதிப்படைந்து முளைக்கத் தொடங்கின. இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து தாழ்வான பகுதியில் இயங்கிவந்த இந்த சேமிப்புக் கிடங்கை மூடுவதற்கு உத்தரவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதாக உத்தரவாதம் அளித்து இருந்தனர். இந்நிலையில் மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது வரை நெல் மூட்டைகளை வேறு இடத்திற்கு மாற்றாமல் புதிதாக நெல் மூட்டைகளை அதே இடத்தில் சேமிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவிலிருந்து விடிய விடிய பெய்த கன மழையால் சேமிப்பு கிடங்கு சுற்றி தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளது. இதனால் சரியான முறையில் பாதுகாக்கப்படாமல் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த திறந்தவெளி மேல் சேமிப்புக் கிடங்கை வேறு இடத்திற்கு மற்ற சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


