மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சீர்காழியில் சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இன்று மயிலாடுதுறை எஸ்பி சுகுணாசிங் உத்தரவின்படி சீர்காழி புதிய பேருந்து 

News image
Updated On :7 மார்ச் 2022, 9:48 am

DIN

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இன்று மயிலாடுதுறை எஸ்பி சுகுணாசிங் உத்தரவின்படி சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் சைபர் கிரைம் காவல்துறையினர் இணையவழி மூலம் நடைபெறும் மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

மேலும் குழந்தைகள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணிக்கவும் அறிவுறுத்தினர். இணையத்தின் வாயிலாகவோ செல்போன் வாயிலாகவோ உங்களது சுய விவரங்களை யாரேனும் கேட்டால் பகிர வேண்டாம். முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பனாக்கிக் கொள்ள வேண்டாம். உங்களது ஏடிஎம் கார்டு, ஆதார் கார்ட், ஓடிபி எண்களை யாரிடமும் பகிர வேண்டாம். அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்க வேண்டாம்.

அதில் உங்கள் தகவல்களை திருடும் வைரஸ் அடங்கியிருக்கலாம். பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி என்னை அழைத்து சைபர் கிரைம் காவல்துறையிடம் தகவல் கொள்ளவும் பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். 

இதுமட்டுமின்று ஆன்லைன் மோசடியில் இருந்து பொது மக்கள் எவ்வாறு தங்களை காத்துக் கொள்ளலாம் என்பது அடங்கிய துண்டுப் பிரசுரங்களை காவல்துறையினர்  பொது மக்களுக்கு வழங்கினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.