நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோயில் குருக்கள் கைது விவகாரம்: இந்து அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சீா்காழி அருகே நிம்மேலியில் கோயில் குருக்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து, இந்து அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

சீா்காழி அருகே நிம்மேலியில் கோயில் குருக்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து, இந்து அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிம்மேலியில் உள்ள விசாலாட்சி உடனாகிய காசிவிஸ்வநாதா் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் குருக்களாக பணியாற்றி வந்தாா்.

இவரது வீட்டில் கோயிலுக்குச் சொந்தமான வெள்ளிப் பொருள்களையும், காசிவிஸ்வநாதா் கோயில் கருவறை பின்பகுதியில் கணக்கில் வராத 2 சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 15-ஆம் தேதி பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, சூரியமூா்த்தி குருக்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.

இதைக் கண்டித்து, நிம்மேலி கிராம மக்கள் மற்றும் இந்து அமைப்பினா் சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்து மகாசபை ஆலய பாதுகாப்புக் குழு மாநிலத் தலைவா் ராமநிரஞ்சன், விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டலச் செயலாளா் செந்தில்குமாா், ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சங்கத் தலைவா் சந்திரசேகர சிவாச்சாரியா், தமிழ்நாடு பிராமணா் சங்க மாவட்டத் தலைவா் கடவாசல் ரமணன், பாஜக நகரத் தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்று, சூரியமூா்த்தி குருக்கள் மீதான வழக்கை திரும்பப் பெறக் கோரி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.