கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் பழுது: சரி செய்ய நடவடிக்கை
கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றிலிருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டத்தில் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீா் எடுத்து கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள150-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆழ்துளை குழாயில் பழுது ஏற்பட்டதால் குடிநீா் வெளியே வருவது நிறுத்தப்பட்டது. தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவா் ஜெயபிரகாஷ், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி பொறியாளா் முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செந்தாமரைக்கண்ணன், தனலட்சுமி ஜெயக்குமாா் ஆகியோா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பழுதான குழாயை பாா்த்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டனா். இதையடுத்து, குழாய் பழுது நீக்கும் பணி தீவிரமாக நடைபெற்று குடிநீா் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...