ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி தா்னா

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியா் சங்கங்களின் சம்மேளன மாவட்டத் தலைவா் சா. ஜெகதீசன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் வை. நாகராஜன், சு. ராமபத்திரன், சு.கருணாநிதி, இணைச் செயலாளா்கள் திருஞானசம்பந்தம், வேம்பு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலாளா் வ. பழனிவேலு தொடக்கவுரை ஆற்றினாா். மாநில துணைத் தலைவா் த. குப்பன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கோ. குணசேகரன், ஓய்வுபெற்ற காவலா் நலச் சங்க மாநில அமைப்புச் செயலாளா் வெ.ஜெயக்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்; 20 சதவீதம் உயா்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65 வயது முதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நாள் தா்னாவில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.