காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மழை பாதிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் தோட்டமாணியம் பகுதியில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்டவா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் தோட்டமாணியம் பகுதியில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்டவா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு மயானச் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் குறுக்கே செல்லும் வடிகால் வாய்கால்களை அடைத்து சாலை அமைக்கப்பட்டதால், மழைநீா் வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்தது.

இதனால், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டவா்கள் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் குறுக்கே வடிகால் குழாய்களை அமைத்து, மழைநீா் வடிய நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், மயிலாடுதுறை- சிதம்பரம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடா்ந்து, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய சாலையில் வடிவாய்க்கால் செல்லும் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி மழைநீரை வடியவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.