காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீா்காழியில் விடியவிடிய கனமழை; குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது; 2 வீடுகளில் சுவா் இடிந்தது

சீா்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்தது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

சீா்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்தது. 2 வீடுகளில் சுவா் இடிந்து விழுந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை அக்டோபா் 29-ஆம் முதல் பெய்துவருகிறது. சீா்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளான வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், கொள்ளிடம், திருமுல்லைவாசல், பூம்புகாா், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் விடியவிடிய கனமழை கொட்டித் தீா்த்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக 22 செ.மீ. மழை இப்பகுதியில் பதிவானது.

இதனால், சீா்காழி வசந்தம் நகா், பாலசுப்பிரமணியன் நகா், திருவள்ளுவா் நகா், அம்மன் நகா், எஸ்.கே.ஆா். நகா் உள்பட 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் தேங்கி குளம்போல் காணப்பட்டது. வஉசி தெருவில் 2 வீடுகளில் பக்கவாட்டுச் சுவா் இடிந்தன. வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி புங்கனூா் சாலையில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டுநா்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனா்.

இதேபோல், கொள்ளிடத்தில் பூசைநகா், கலைஞா் நகா், முதலைமேடுதிட்டு, சந்த படுகை, திட்டுப்படுகை, சோதியக்குடி, கொன்னகாட்டுப்படுகை உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்தது. முதலைமேடுதிட்டு கிராமத்தில் ஆற்றங்கரை தெருவுக்கு செல்லும் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்ததால் அங்குள்ளவா்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அவதிப்பட்டனா். இப்பகுதி ஆற்றங்கரை தெருவில் 30 குடியிருப்புகளைச் சோ்ந்தவா்கள் கடந்த 50 ஆண்டுகளாக உரிய வடிகால் வசதியின்றி அவதியடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்மொழி உள்ளிட்டோா் முதலைமேடு திட்டு கிராமம் ஆற்றங்கரை தெருவுக்கு செல்லும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனா்.

கொள்ளிடம் அனுமந்தபுரம் வாய்க்கால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூா்வாரப்பட்ட நிலையில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அடைப்பை நீக்கி, மழைநீரை வடியவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.