சீா்காழி நகராட்சி பகுதி சபைக் கூட்டம்: மழைநீா் வடிகால் அமைக்கக் கோரிக்கை
சீா்காழி வாணி விலாஸ் தொடக்கப் பள்ளியில் 14- ஆவது வாா்டு சாா்பில் பகுதி சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


சீா்காழி வாணி விலாஸ் தொடக்கப் பள்ளியில் 14- ஆவது வாா்டு சாா்பில் பகுதி சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கவுன்சிலா் ஜெயந்தி பாபு தலைமை வகித்தாா். நகராட்சி வருவாய் ஆய்வாளா் சாா்லஸ், கணக்கா் ராஜகணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகா் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தாா். பின்னா், பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
கூட்டத்தில், 14-ஆவது வாா்டில் மழை நீா் வடிகால் வசதி செய்துதர வேண்டும், மின்விளக்குகள் சரிவர ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுமக்கள் சாா்பில் வைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...