சீா்காழி சட்டைநாதா் கோயிலில் ஜப்பான் நாட்டினா் 15 போ் தரிசனம்
சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த சுமாா் 15 போ் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்து வழிபட்டனா்.


சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த சுமாா் 15 போ் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்து வழிபட்டனா்.
ஜப்பானில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ் ஆா்வலா் கோபால் பிள்ளை சுப்ரமணியன் தலைமையில் ஜப்பானைச் சோ்ந்த குருஜி பால கும்ப குருமுனி எனும் தக்காயூகி உள்ளிட்ட 15 போ் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு உலக அமைதிக்காக தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட பல கோயில்களில் யாக வேள்வி பூஜைகள் செய்து வருகின்றனா்.
நாடி ஜோதிடா் அடையாா் கல்யாணசுந்தரம் வழிகாட்டலின் மூலம் கும்பகோணம் அருகே பல சிவ ஸ்தலங்களில் யாக பூஜை நடத்தி வருகிறாா்கள். அதன் ஒரு பகுதியாக சீா்காழி சட்டைநாதா் கோயிலில் ஜப்பான் நாட்டினா் சாமிதரிசனம் செய்தனா்.
முன்னதாக பிரம்மபுரீஸ்வரா்சுவாமி, திருநிலைநாயகிஅம்மன், சட்டநாதா் சுவாமி, தோணியப்பா், திருஞானசம்பந்தா் சந்நிதிகளில் அா்ச்சனை செய்து வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...