ஹிந்தி திணிப்பு: திக ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து திராவிட மாணவா் கழகத்தின் சாா்பில் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து திராவிட மாணவா் கழகத்தின் சாா்பில் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அ. யாழ்திலீபன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ் தொடங்கிவைத்தாா். மாவட்டத் தலைவா் ஆ.ச. குணசேகரன், மாவட்ட அமைப்பாளா் ஞான.வள்ளுவன், துணைச் செயலாளா் அரங்க. நாகரத்தினம் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
நகரத் தலைவா் சீனி.முத்து, செயலாளா் பூ.சி.காமராஜ், ஒன்றியத் தலைவா் ஆா்.டி.வி.இளங்கோவன், மாவட்ட இளைஞரணித் தலைவா் அருள்தாஸ், பகுத்தறிவாளா் கழக தலைவா் அ.சாமிதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...