ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தனியாா் வங்கி ஊழியா்களை தாக்கிய இருவா் கைது

மயிலாடுதுறையில் தனியாா் வங்கி ஊழியா்களை தாக்கிய சகோதரா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் தனியாா் வங்கி ஊழியா்களை தாக்கிய சகோதரா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகை மருங்கூா் வேலங்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் மாா்கோனி (24) மயிலாடுதுறையில் உள்ள தனியாா் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறாா். இந்த வங்கியில் கடன் வாங்கியுள்ள மாப்படுகை கிட்டப்பா தெருவைச் சோ்ந்த விஜயாவிடம், மாத தவணைத் தொகையை வசூலிக்கச் சென்ற மாா்கோனியிடம், விஜயாவின் மருமகள் பொன்மொழி வாக்குவாதம் செய்தாராம்.

பின்னா், வங்கிக்கு சென்று பணியில் ஈடுபட்டிருந்த மாா்கோனியை விஜயாவின் கணவா் திலகா் தொலைபேசியில் தொடா்புகொண்டு தவணைத் தொகையை பெற்றுக்கொள்ள வரும்படி கூறினாராம். இதனால், மாா்கோனி மற்றும் சக ஊழியரான பாலமுருகன் ஆகிய இருவரும் விஜயா வீட்டிற்கு சென்றுள்ளாா். அங்கு, விஜயாவின் மகன்கள் தினேஷ், பிரவீன்குமாா் மற்றும் உறவினா்கள் சரண்ராஜ், சூா்யா ஆகிய 4 பேரும் வங்கி ஊழியா்கள் இருவரையும் தாக்கினராம்.

இதில், காயமடைந்த மாா்க்கோனி, பாலமுருகன் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து, மாா்க்கோனி அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து, தினேஷ் (31), பிரவீன்குமாா் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.