மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சீர்காழி அருகே கார் மோதி எலக்ட்ரீசியன் பலி: மருத்துவக் கல்லூரி மாணவர் கைது

சீர்காழி அருகே கார் மோதி எலக்ட்ரீசியன் பலியான வழக்கில் மருத்துவக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :21 நவம்பர் 2022, 9:15 am

சீர்காழி அருகே கார் மோதி எலக்ட்ரீசியன் பலியான வழக்கில் மருத்துவக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாபாளன் கோவில் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோசம் மகன் டேவிட் கிருபாகரன் (35). எலக்ட்ரீசியனராக பணிபுரிந்து வந்த இவர் பைபாஸ் சாலையில் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். 

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே டேவிட் கிருபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இது குறித்து டேவிட் கிருபாகரனின் மனைவி ஜெய சுபாங்கி அளித்த புகாரின் பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த காரைக்கால் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி, படித்து வரும் சேலம் மாவட்டம் கோனூர் பாலகிருஷ்ணன் மகன் சச்சின்(27) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.