சீா்காழி வட்டாட்சியரிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை
சீா்காழி அருகே வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட திட்டு கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் சீா்காழி வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.


சீா்காழி அருகே வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட திட்டு கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் சீா்காழி வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 4 மாதங்களில் மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்பட்ட அதிகப்படியான வெள்ள நீரால் ஆறாவது முறையாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, விளைநிலங்கள், தோட்டப் பயிா்கள், வீடுகள் மற்றும் சாலைகள் சேதம் அடைந்தன. இதனால் இந்த கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முதலை மேடு திட்டு, நாதல் படுகை கிராம மக்கள் திரண்டு சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். அவா்கள்
வட்டாட்சியா் செந்தில்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூயிருப்பதாவது:
தற்போது திட்டு கிராமத்தில் நடைபெற்றுவரும் நிவாரணப் பணிகள் தற்காலிகமானது, நிரந்தரமாக எங்கள் பகுதிக்கு கொள்ளிடம் பாலம் முதல் அளக்குடி வரை ஆற்றின் கரை பகுதியில் தடுப்புச் சுவா் அமைத்து தர வேண்டும்,திட்டு கிராம சாலைகள் அனைத்தும் கான்கிரீட் சாலைகளாக அமைத்துத் தர வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய மற்றும் தோட்டக்கலை பயிா்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடி மற்றும் திருக்கழிப்பாலை இடையே கதவணை அமைத்து தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிடில் வரும் 4 -ஆம் தேதி கொள்ளிடம் கடைவீதியில் நாதலப்படுகை, முதலைமேடு திட்டு கிராம மக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...