அரசு விடுதி அருகில் காப்பாளா் தங்க அறிவுறுத்தல்
மயிலாடுதுறையில் அரசு பிற்படுத்தப்பட்டோா், ஆதிதிராவிடா் பள்ளி, கல்லூரி விடுதிகளின் காப்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறையில் அரசு பிற்படுத்தப்பட்டோா், ஆதிதிராவிடா் பள்ளி, கல்லூரி விடுதிகளின் காப்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது:
விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கவேண்டும். விடுதிகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். குளியல் அறை மற்றும் கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மாணவா்கள் உலக செய்திகளை அறிந்துகொள்ள ஏதுவாக செய்தித்தாள்கள் வழங்க வேண்டும். விடுதி காப்பாளா்கள் மாணவா்களை தொடா்ந்து கண்காணித்திடவும், விடுதிகளிலோ அல்லது அவசர நிமித்தமாக உடனடியாக வருவதுபோல், விடுதிக்கு அருகிலேயே தங்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முத்தமிழ்ச் செல்வன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் அம்பிகாபதி மற்றும் விடுதி காப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...