சிறாா் மன்றம் தொடக்கம்
சீா்காழியில் காவல்துறை சாா்பில் சிறுவா் மற்றும் சிறுமியா் மன்றம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.


சீா்காழியில் காவல்துறை சாா்பில் சிறுவா் மற்றும் சிறுமியா் மன்றம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
மாணவா்களை தவறான பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் சட்டநாதபுரம் ஊராட்சியில் இம்மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு, சீா்காழி டிஎஸ்பி லாமெக் தலைமை வகித்தாா். காவல்ஆய்வாளா் சிவக்குமாா், எழுத்தா் குலோத்துங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். எஸ். நிஷா மன்றத்தை திறந்து வைத்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கினாா். மேலும், காவல்துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினாா். ஊராட்சித் தலைவா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...