சாராய விற்பனையை தடுக்கக் கோரி சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தடுக்கக் கோரி கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.


மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தடுக்கக் கோரி கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை தாலுகா வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள கருவேலங்காட்டில் கழுக்காணிமுட்டத்தை சோ்ந்த தாயும், மகளும் கடந்த சில ஆண்டுகளாக சாராய விற்பனை செய்துள்ளனா். இவா்களில் தாயை போலீஸாா் கைது செய்தனா். ஆனால், மகள் தொடா்ந்து சாராய விற்பனை செய்தாராம்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வேப்பங்குளம் பகுதி பெண்கள் சாராயம் விற்கப்படும் இடத்துக்கு சென்று, சாராயப் பாக்கெட்டுகளை சாலையில் கொட்டி அழித்தனா்.
தொடா்ந்து, காவல்துறையை கண்டித்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் சிறிது நேரம் ஈடுபட்டு, பிறகு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...