காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு பேரூராட்சி மற்றும் பட்டவா்த்தி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :3 நவம்பர் 2023, 7:05 pm

DIN

மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு பேரூராட்சி மற்றும் பட்டவா்த்தி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மணல்மேடு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியா், தொடா்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு, மருந்தகம் மற்றும் புற நோயாளிகள் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.

பின்னா், பட்டவா்த்தி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.7.64 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட குட்டக்குளம், ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெற்களம் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் எம். மஞ்சுளா உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.