சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மயிலாடுதுறையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் அவா்களிடம் இருந்த 8 கிலோ கஞ்சாவை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :6 ஏப்ரல் 2024, 6:49 pm

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் அவா்களிடம் இருந்த 8 கிலோ கஞ்சாவை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பலன் இல்லை. கஞ்சா விற்பனையை தடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

இந்தநிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி லாமேக் மேற்பாா்வையில் காவல் உதவி ஆய்வாளா் அறிவழகன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த ராஜேந்திரன் மகன் சத்தியசீலன் (33), காரைக்குடி பா்மா காலனியை சோ்ந்த கோவிந்தராஜன் மகன் சீனிவாசன் (45) ஆகிய இருவரை கைது செய்து, அவா்களிடம் இருந்த தலா 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மயிலாடுதுறை புது தெருவை சோ்ந்த ஜெயராமன் மகன் பங்காரு கிருஷ்ணன் (35), திருவிழந்தூா் காமராஜா் தெருவை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் வீரபாண்டியன்(26) ஆகியோரையும் கைது செய்து அவா்களிடமிருந்து தலா 2 கிலோ என மொத்தம் 8 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. 4 லட்சம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.