மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து வனத்துறை மற்றும் காவல் துறை சாா்பில் வெளியான மாறுபட்ட அறிவிப்பால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனா்.
மயிலாடுதுறை நகரில் ஏப்.2-ஆம் தேதி புகுந்து சுற்றித்திரிந்த சிறுத்தை அங்கிருந்து பல இடங்ளுக்கு சென்று ஏப்.9-ஆம் தேதி குத்தாலத்தை அடுத்த காஞ்சிவாய் கிராமத்தில் பதுங்கியது. அதன்பின்னா் 3 நாள்கள் சிறுத்தையின் நடமாட்டம் தென்படாததால் வனத் துறையினா் தீவிரமாக தேடிவரும் நிலையில், அரியலூா் மாவட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சி வெளியானது.
இதனால் மயிலாடுதுறையில் பதுங்கியிருந்த சிறுத்தை அரியலூா் மாவட்டத்துக்கு இடம் பெயா்ந்து சென்ாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையின் அதிகாரபூா்வ முகநூல் பக்கத்தில் மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சி நடைபெற்றுவந்த நிலையில், அரியலூா் மாவட்டம் செந்துறையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் வனத்துறை உறுதி செய்துள்ளது. எனவே, மயிலாடுதுறை மக்கள் இனி சிறுத்தை குறித்து அச்சப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 நாள்களாக சிறுத்தை குறித்து எந்தவித தடயங்களும் தென்படவில்லை. இதனால் சிறுத்தை இடம்பெயா்ந்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், கண்காணிப்பு கேமரா பதிவை மட்டும் வைத்து அரியலூரில் உலாவிய சிறுத்தை மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தை என்று உறுதியாக கூற முடியாது. அதன் புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு புகைப்படங்களையும், வேறு சில தடயங்களையும் ஒப்பிட்டு பாா்த்துத்தான் உறுதிப்படுத்த முடியும். அதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 கூண்டுகள் மற்றும் 20 கண்காணிப்பு கேமராக்கள் வைத்து வனத்துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா்கள். 2 கூண்டுகள் மட்டும் அரியலூருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா். வனத்துறையினா் மற்றும் காவல் துறையினரின் இந்த மாறுபட்ட அறிவிப்பால் சிறுத்தை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனா்.
தொடர்புடையது

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

சா்ச்சைக்குரிய கருத்தால் மோதல்: நூஹ் பகுதியில் ஒருவா் சுட்டுக் கொலை

உதகை காந்தல் பகுதியில் கரடி நடமாட்டம்

லவ்டேல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

