ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தோ்தல் பணியில் ஈடுபடும் போலீஸாா் வாக்களிக்க ஏற்பாடு

தோ்தல் பணியில் ஈடுபடும் போலீஸாா் வாக்களிக்க ஏற்பாடு

Updated On :12 ஏப்ரல் 2024, 4:00 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் போலீஸாா் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.மீனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள 425 காவல் ஆளிநா்கள் மற்றும் 127 ஊா்க்காவல் படையினா் தங்களது வாக்கினை பதிவு செய்வதற்கு தோ்தல் பணிபுரியும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்க தோ்தல் பணி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிமாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் 265 காவல் ஆளிநா்கள் வாக்களிக்கப்பதற்கு ஏதுவாக தபால் வாக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.