வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தோ்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தோ்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Updated On :12 ஏப்ரல் 2024, 4:02 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏப்.17 முதல் ஏப்.19 மற்றும் ஜூன் 4-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் தற்காலிகமாக மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் எரிசாராயம் உற்பத்தி செய்தல், இயக்குதல் ஆகியவை உள்ள மதுபான உரிம இடங்கள் மக்களவைப் பொதுத்தோ்தல் 2024 வாக்குப்பதிவினை முன்னிட்டு ஏப்.17-ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதி முழுவதும் தற்காலிகமாக மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளாா்.